Tuesday, 17 May 2011

முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

இன்று தமிழக முதல்வர் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

E-mail அச்செடுக்க
தமிழக புதிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மதியம் இரண்டு மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இடம்பெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது சட்டசபைக் கூட்டம், பட்ஜட் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா உட்பட புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டதுடன், புதிய அமைச்சர்கள் இன்று இலாகாக்களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களை வரவேற்று வாழத்த மக்கள் கூட்டம் கோட்டையில் கூடியது.

இதேவேளை புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் தயாராக இல்லாத காரணத்தினால் அவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் விடுதிகளில் தங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment