சென்னை : அமைச்சர் மரியம் பிச்சையின் மரணம் காரணமாக காலியாகியுள்ள திருச்சி மேற்கு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள காலியிடம் ஆகியவற்றுக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மரியம் பிச்சை சமீபத்தில் திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கோரவிபத்தில் பலியானார். இதனால் அவரது திருச்சி மேற்கு தொகுதி காலியாகியுள்ளது.
இதேபோல ராஜ்யசபா உறுப்பினராக இருந்த கே.வி.ராமலிங்கம், பொதுப்பணித்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளதால் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் அந்த இடமும் காலியாகியுள்ளது.
இரு இடங்களுக்கும் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இது எப்போது நடைபெறும் என்று பிரவீன் குமாரிடம் கேட்டதற்கு,
காலியாக உள்ள தொகுதி குறித்து சட்டசபை செயலர் தெரிவிப்பார். அதை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி, தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்கும் தேதியில், இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார், அந்த இடத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்தும் தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து, அதன் அனுமதி பெற்று தேர்தல் நடத்தப்படும்.
இரு இடங்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று அவர் கூறினார்.